செய்திகள்

அன்பர்களின் அனுபவங்கள்
 
அன்பர் திருமதி கௌரிஅவர்களின் அனுபவம்
 
ஶ்ரீ அகண்ட பரிபூரண சச்சிதானந்த அத்வைத திடஞான சபை தொட்டி மாத்தூரில் இருந்து பதிவிடுகிறேன். 
மாத்தூர் சபையில் குருபரன் வாசம் செய்த போது  இங்கு குருபூஜை நடந்து கொண்டு இருந்தது. அப்போது திறந்த வெளியில் சமையல் நடந்து கொண்டு இருந்தது. மழை மேகம் இருடௌடி கொண்டு வந்தது.  அன்பர்கள் குருபரனிடம் ஒடி வந்து மழை பெய்தால் சிரமம் என கூற குருபரன் எழுந்து வெளியில் வந்து” இடம் தெரியாமல் வருகின்றதோ ” என கூறி ஆகாயத்தை நோக்கி கோடு போடுவது போல் செய்கை செய்த உடன் மேகங்கள் இரண்டு புறமும் விலகி மழை வராமல் நின்று விட்டது.  
 
          அன்று மட்டும் அல்ல இன்றும் குருபரன் பெருகருணையால் காரியங்கள் நடை பெறுகிறது. சென்ற வாரம் மாத்தூர் சபையில்  நடை பாதை போடும் பணி செய்ய முடிவு செய்து சென்னையில் இருந்து புறப்பட்டோம். தஞ்சையில் விடாமல் மழை கொட்டுகிறது என செய்தி  .வாணியம்பாடியில் இருந்து அன்பர்கள் பணிக்கு வருகிறார்கள். என்ன செய்வது குருபரனை வேண்டுவதை தவிர என்ன செய்ய முடியும். வயதான தாயின் ஞாயமான கோரிக்கை எனக்கு தெரிந்து குருபரன் இதுவரை நடத்தி வைத்துள்ளார்கள். அது போல் அவர்ககள் குருநாதா நீ தான் நல்லபடியாக பணி நடை பெற உதவி புரிய வேண்டும் என வேண்டி கொண்டார்கள். சென்னையில் இருந்து புறப்பட்டதில் இருந்து மழை இல்லை வழி நெடுகிலும். ஆனால் ஊளுந்தூர் பேட்டையில் லேசாக ஆரம்பித்ததது மழை. தஞ்சைக்கு வந்து அன்று மாலை நல்ல மழை. சரி பிறகு அந்த பணியை பிறகு செய்யலாம் என தீர்மானித்து வாணியம்பாடியில் இருந்து கிளம்ப வேண்டாம் என தெரிவிக்க கைபேசியில் தொடர்பு கொண்ட போது       ரயில் நிலையத்திற்கு வந்து விட்டதாக தகவல். சரி குருபரன் விட்ட வழி என குருபரனிடம் விட்டு விட்டோம்.  சனி கிழமை காலை தஞ்சை வந்து விட்டார்கள். அன்று மழை சற்று குறைந்து லோசாக தூறல். அன்று சபை சுற்றுபுறத்தை சுத்தம் செய்தார்கள். மறுநாள் காலை ஞாயிறு  பணியை துவங்கினார்கள். அன்று முதல் மழை கிடையாது நேற்று வியாழகிழமை பணி இரவு 7மணிக்கு முடித்தார்கள். மணி சரியாக 11.10  மணிக்கு  நல்ல மழை பெய்தது குருபரன் கருணையினால் பணிகள் அனைத்தும் மிக எளிதாக நடந்தது. இங்கு பணி நடக்கும் பொழுது கூறினார்கள் மாயவரத்தில் மழை பெய்து கொண்டு உள்ளது என.  அன்று மட்டும் அல்ல இன்றும் குருபரன்பெருகருணை நம்மை இரட்சித்து வருகிறது என்பது உறுதி. ஒரு பானை சேற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் இதுவும் ஒர் உதாரணம்.
 
அன்பர் திருமதி செல்வி அவர்களின் அனுபவம்
 
நான் செல்வி, தாம்பரம் பகுதியில் வசிக்கிறேன். என் வாழ்க்கையில் பல இன்னல்களை மேற்கொண்டு வாழ்ந்து வந்தேன். நான்  ஒரு எழுத்தாளர்.. எனக்கு கதைகள் எழுதுவது மிகவும் பிடித்த ஒன்று.. எனது கதைக்கான அங்கீகாரத்தை தேடி பல முயற்சிகள் எடுத்திருக்கிறேன். ஆனால் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தது.. ஒருமுறை என்னுடைய நண்பர் ஒருவர் தாம்பரத்தில் உள்ள  ஸ்ரீ அகண்ட பரிபூரண சச்சிதானந்த சற்குரு சுவாமிகளின் மகிமைகளை கூறி, குருசேஸ்திரத்துக்கு அழைத்தார்.. எனக்கு கடவுள் மீது நம்பிக்கை இல்லாததால், அன்று குருசேஸ்திரத்திற்கு வர மறுத்துவிட்டான்.. ஒரு வருடம் கழித்து மீண்டும் என்னை என் நண்பர் சற்குருவின் குருசேஸ்திரத்திற்கு அழைத்தார்.. அவரிடம் நான் முயற்சிக்கிறேன் என்றேன். மறுநாள் நண்பரின் அழைப்பிற்காக தாம்பரத்தில் உள்ள சச்சிதானந்தரின் கோவிலுக்கு சென்றேன்.. சற்குருவை மனதார வேண்டித் தொழுதேன். அன்று எனக்கு மனதில் நிம்மதி கிடைத்தது.. எனக்குள் இருந்த கவலைகள் எங்கோ சென்றது போல் தோன்றியது.. அன்று  சச்சிதானந்தரின் அருள் எனக்கு முழுமையாக கிடைத்ததை உணர்ந்தேன். குருசேஸ்திரத்திற்கு வந்த மறுநாளே என்னுடைய கதையை ஒரு தயாரிப்பு நிறுவனத்திடம் சொல்ல வாய்ப்பு கிடைத்தது.. அன்று எனக்கு ஆச்சரியங்கள் காத்திருந்தது.. என் கதை அன்று ஏற்கப்பட்டது. எனது கதை காண முன் தொகையும்(50,000) அன்றே எனக்கு கிடைத்தது.. அந்த நாள் வரை கடவுள் நம்பிக்கையே இல்லாத நான் சற்குருவின் மீது நம்பிக்கை கொண்டேன்.. அதன் பின் தாம்பரத்தில் உள்ள சற்குருவின் குருசேத்திரத்திற்கு எனது வருகை அதிகரித்த வண்ணம் இருந்தது.. 
ஒன்றே கடவுள் உணர்வே பிரம்மம் அறிவே சற்குரு சற்குருவே கடவுள் என்பதை உணர்ந்தேன். ஸ்ரீ அகண்ட பரிபூரண சச்சிதானந்த சற்குருவின் திருவடிகளே சரணம் என்று அவர் பாதம் பணிந்தேன்.. சற்குருவின் அருள் எனக்கு பரிபூரணமாக கிடைத்தது. இன்று நான் வாழ்க்கையில் சிறந்து, வாழ்வில் மேம்பட்டு, நல்ல அன்பான கணவனோடு, இன்பமாக வாழ்கிறேன்